அதிமுகவின் இரு அணிகள் இணைவதில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதற்கு, தஞ்சாவூர் பிரமுகர் ஒருவரே முக்கிய காரணம் என்று தினகரன் மறைமுகமாக கூறியுள்ளார்.

அவரை நம்பி களத்தில் இறங்கினால், அவராலேயே ஆபத்தில் சிக்க வேண்டி வரும் என்றும் அமைச்சர்களை தினகரன் எச்சரித்துள்ளார்.

தினகரனை ஒதுக்கி விட்டதாக அமைச்சர்கள் கூறினாலும், தாமே ஒதுங்கி விட்டதாக தினகரன் கூறினாலும், அணிகள் இணைப்புக்கு பின்னர், ஏதாவது ஒரு ரூட் போட்டு தினகரன் உள்ளே வந்து விடுவார் என்றே எடப்பாடி தரப்பு அஞ்சுகிறது.

அதனால், டெல்லிக்கு விசாரணைக்காக போயுள்ள தினகரன், கைது செய்யப்பட்டால், பன்னீர் தரப்பு விதித்துள்ள நிபந்தனையை நிறைவேற்றுவதில் சிக்கல் இருக்காது என்று எடப்பாடி நினைக்கிறார்.

ஆனால் தினகரனோ, அமைச்சர்கள் தாமாக என்னை கட்சியில் இருந்து விலக்கி இருந்தால் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், தஞ்சாவூரில் இருந்து வரும் உத்தரவை அப்படியே அமைச்சர்கள் பின்பற்றுவதுதான் வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இப்போது, அமைச்சர்கள் என்னை ஒதுக்கினார்கள், நான் ஒதுங்கி விட்டேன். ஆனால், தஞ்சாவூர் காரரை அவ்வளவு எளிதாக, என்னைப்போல தூக்கி ஏறிய முடியாது.

அதன் பிறகு உருவாகும் சிக்கலால், அமைச்சர்கள் என்ன பாடு பட போகிறார்களோ? தெரியவில்லை. மாலை என்று நினைத்து பாம்பை எடுத்து கழுத்தில் போட்டு கொண்டிருக்கும் அமைச்சர்கள், அதற்கான பலனை விரைவில் அனுபவிப்பார்கள் என்றும் தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினகரன் பாம்பு என்று சொன்னது, தம் சித்தப்பா நடராஜனைதான் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் நாம் அப்படி சொல்லவில்லை.