BJP : பாஜகவில் ரவுடிகள்... சட்ட ஒழுங்கைப்பற்றி பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கு.? சீறும் திருச்சி சூர்யா
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று அண்ணாமலை அவர்கள் நினைத்தால் தன்னுடைய கட்சியில் சேர்த்த ரவுடிகளின் பட்டியலை வெளிப்படையாக Slide Show போட்டு வெளியிட்டு விட்டு, அந்த ரவுடிகளை கட்சியில் இருந்து நீக்கினால் தமிழ்நாட்டில் கண்டிப்பாக சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வரும் என திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கை காப்பாற்றுங்கள்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ள நிலையில், இதற்கு பதில் அளிக்கும் விதமாக அண்ணாமலையின் முன்னாள் ஆதரவாளர் திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை மிகவும் கண்டிக்கத்தக்கது. கூலிப்படையினரையும், கொலைக்கு காரணமான உண்மை குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்வதோடு, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வருவது தமிழ்நாடு அரசின் பொறுப்பு. இதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
பாஜகவில் குற்ற பின்னணி நபர்கள்
இவை ஒருபுறமிருக்க, தமிழக பாஜகவில் குற்ற பின்னணி உடையவர்கள் முக்கிய பதவிகளில் உள்ளார்கள் என்று தமிழிசை அக்கா குற்றஞ்சுமத்தியும், கிணற்றில் போட்ட கல்லாக கிடந்த அண்ணன் அண்ணாமலைக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பற்றி கேள்வி கேட்க யோக்கியதை இருக்கிறதா?
- செங்கல்பட்டு அருகே காவலரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற பிரபல ரவுடியும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யா மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அவரையும், அவரது கூட்டாளிகளையும் கைது செய்தனர்.
- கைது செய்யப்பட்ட ரவுடி சீர்காழி சத்யா கையில் கள்ளத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. ரவுடி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வாங்கி கொடுத்ததாக பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்ஸ் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரவுடிகளை கட்சியில் இருந்து நீக்காதது ஏன்.?
உங்கள் கட்சியை சார்ந்த ஒருவர் காவல்துறையால் சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளார் அவர் கையில் கள்ளத்துப்பாக்கி இருந்ததும் அதை உங்கள் கட்சியை சார்ந்த வழக்கறிஞர் வாங்கி கொடுத்தது விசாரணையில் தெரிய வந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஒரு அறிக்கை இல்லை?சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இதுவரை கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை ஏன்? இது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன? நீங்கள் எல்லாம் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று கூறுவதற்கு தகுதி உடையவர்களா?
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று அண்ணாமலை அவர்கள் நினைத்தால் தன்னுடைய கட்சியில் சேர்த்த ரவுடிகளின் பட்டியலை வெளிப்படையாக Slide Show போட்டு வெளியிட்டு விட்டு, அந்த ரவுடிகளை கட்சியில் இருந்து நீக்கினால் தமிழ்நாட்டில் கண்டிப்பாக சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வரும்.சட்டம் ஒழுங்கை பேண தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க பாரத ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் முன் வரவேண்டும் என திருச்சி சூர்யா வலியுறுத்தியுள்ளார்.
அண்ணாமலை கலர் பச்சோந்தி! துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலை தான்: இபிஎஸ்