Asianet News TamilAsianet News Tamil

பைக்கில் பட்டாசு கட்டி வீலிங் செய்து சாகசம்..! மூன்று இளைஞர்களை தட்டி தூக்கிய போலீஸ்

இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டும், வாகனங்களை பறிமுதல் செய்தும், ஒட்டுனர் உரிமம் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கபடும் என திருச்சி போலீசார் எச்சரித்துள்ளனர். 

Trichy police have arrested 3 people who were wheeling on bikes KAK
Author
First Published Nov 14, 2023, 10:54 AM IST

பைக்கில் சாகசம்

தீபாவளி தினத்தில் பைக்கில் பட்டாசு கட்டி வெடித்தும், பைக்கில் வீலிங் செய்தும் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்த 3 பேரை திருச்சி போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக திருச்சி காவல் ஆணையர் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  திருச்சி மாநகரில் பொதுமக்களின் உயிருக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் அஜாக்கிரதையாகவும்,

விபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் (Wheeling) ஈடுபட்டு சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டதன்பேரில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பட்டாசு கட்டி சாகசம்

அதன்படி, திருச்சி மாநகரில் உள்ள அனைத்து காவல்நிலைய எல்லைகளில் இருசக்கர வாகனத்தில் சாகசம்(Wheeling) செய்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனம் ஒட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வரும் நபர்கள் கண்காணிக்கபட்டு வந்த நிலையில், கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி பஜார் பெரியசாமி டவர் அருகில் டைமன்ட் பஜாரை சேர்ந்த உசேன் பாஷா வயது 24, த.பெ.பஷீர் அகமது என்பவர் வீலிங் சாகத்தில் ஈடுபட்டவரை கைது செய்து, வீலிங் செய்ய பயன்படுத்திய வாகனம் கைப்பற்றபட்டது. 

Trichy police have arrested 3 people who were wheeling on bikes KAK

அதே போல் காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பால்பன்னை to செந்தண்ணீர்புரம் சர்வீஸ் ரோட்டில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட தாராநல்லூரை சேர்ந்த ராஜேஷ் வயது 21, த.பெ.முனியப்பன் என்பவரையும் அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குழுமாயி கரை ரோட்டில் கமலா நிக்கேந்தன் பள்ளி அருகில் வீலிங் சாகசத்தில் ஈடுபட்ட கல்லாங்காட்டை சேர்ந்த அஜய் வயது 24/23 த.பெ சீனிவாசன் என்பவரையும் கைது செய்து, வீலிங் செய்ய பயன்படுத்திய வாகனங்கள் கைப்பற்றபட்டன.

Trichy police have arrested 3 people who were wheeling on bikes KAK

ஓட்டுநர் உரிமம் ரத்து

மேற்படி மூன்று நபர்களும் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், ஆபத்தான நிலையில் வாகனம் ஒட்டி சாகசம் (Wheeling) செய்ததற்காக மேற்படி நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், கைது செய்தும், சாகசகத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டும், வாகனங்களை பறிமுதல் செய்தும், ஒட்டுனர் உரிமம் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கபடும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு தொடரும் கன மழை... 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அவரச கடிதம்

Follow Us:
Download App:
  • android
  • ios