treasure box captured in chennai silks

சென்னை சில்க்ஸ் கட்டடம் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் 2 பெட்டகங்கள் மீட்கப்பட்டுள்ளன. பெட்டகங்களில் ரூ.20 கோடி மதிப்புள்ள வைர நகைகள் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை, தி.நகரில் சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த 31 ஆம தேதி தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக கட்டடம் முழுவதும் தீ பரவியது. இந்த தீயை அணைக்க 2 நாட்கள் ஆனது. தீ விபத்தில் கட்டிடம் முழுமையாக பாதிக்கப்பட்டதால், அதை இடிக்க முடிவு செய்யப்பட்டு 2 ஆம் தேதி முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

ஜா கட்டர் எனப்படும் நவீன எந்திரத்தை கொண்டு இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி கட்டிடத்தின் கான்கிரீட் தூணை இடிக்கும் பணியின் போது, முன்பகுதி இடிந்து விழுந்தது.

இந்த நிலையில் கட்டடம் இடிப்பின்போது 6-வது மாடியில் இருந்த தங்க லாக்கரும் சரிந்து விழுந்துள்ளது. 3 டன் எடை கொண்ட தங்க பெட்டகம் பத்திரமாக மீட்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை சில்க்ஸ் கட்டடம் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் 2 பெட்டகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த பெட்டகத்தில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் இருக்கலாம் என்று போலீசார் தெரவிக்கின்றனர். 400 கிலோ தங்கம் 2 டன் வெள்ளி இருந்திருக்கலாம் என்றும் போலீசார் கூறுகின்றனர்.

பெட்டகங்களில் உள்ள நகைகளின் உண்மை மதிப்பு, பெட்டகத்தை திறந்த பிறகே தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.