பாஜகவினருக்கு அதிகார போதை: டி.ஆர்.பி.ராஜா சாடல்!

பாஜகவினருக்கு அதிகார போதை என பறக்கும் படையினர் சோதனையின் போது அதிகாரிகளை பாஜக வேட்பாளர் மிரட்டிய சம்பவத்திற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்

TRB Raaja condemns bjp tiruppur candidate ap muruganandham threatning flying squad officials smp

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு நிலைக்குழு அமைக்கப்பட்டு 3 ஷிப்டுகளாக இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு குழுவிலும் ஒரு அணி குழு தலைவர் தலைமையில் ஒரு சப் இன்ஸ்பெக்டர், ஒரு தலைமை காவலர்,ஒரு காவலர் மற்றும் ஒரு வீடியோ கிராபருடன்  வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோபி அருகே உள்ள கெட்டி செவியூர் குறிச்சி பிரிவில்  ஈரோடு - திருப்பூர் மாவட்ட எல்லையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தத்தின் காரையும் கண்காணிப்பு நிலைக்குழவினர் வாகன சோதனைக்காக நிறுத்தினர். ஆனால், காரை ஓரமாக நிறுத்தாமல் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நிறுத்தியதோடு, வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்த பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், உங்கள் அனைவரையும் வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

கெஜ்ரிவாலை போல் சஞ்சய் சிங்கும் குற்றாவாளிதான்: பாஜக சாடல்!

திருப்பூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்காததோடு, அவர்களை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பாஜகவினருக்கு அதிகார போதை என பறக்கும் படையினர் சோதனையின் போது அதிகாரிகளை பாஜக வேட்பாளர் மிரட்டிய சம்பவத்திற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், “எனது வாகனம் தினந்தோறும் சோதிக்கப் படுகிறது. ஒவ்வொரு முறையும் வாகனத்தின் அனைத்து பகுதிகளும் முழுமையாக சோதிக்கப்படுகிறது.

 

 

அதிகாரிகளின் பணி அதுவே என்று அதை மதித்து முழுமையாக ஒத்துழைப்பது நமது கடமை !அந்தக் கடமையிலிருந்து நான் தவறுவதில்லை. ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் அதிகாரிகள் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் இப்படி எந்த அதிகாரியையும் மிரட்டுவது ஒருபோதும் சரி அல்ல.

அதிகார போதையில் பாஜகவினர் அதிகாரிகளை மட்டுமல்ல பொதுவாக மக்களையே மதிப்பதில்லை ! இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிலைமை என்ன ஆகும்? அதிகாரிகளின் நிலைமை என்னவாகும்? சிந்தியுங்கள்!” என பதிவிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios