travel comfort chennai city

பயணத்துக்கு ஏற்ற இந்திய நகரங்களில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சர்வதேச அளவில் பயணத்துக்கு ஏற்ற நகரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் மூலம் சர்வதேச அளவில் பயணம் செய்ய ஏற்ற நகரங்களாக 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.

அந்த 100 நகரங்களில் இந்தியாவிலிருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, புனே, கொல்கத்தா ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. 

அந்த பட்டியலின் அடிப்படையில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களை வரிசைப்படுத்தலாம். அந்த வகையில், இந்தியாவில் பயணத்துக்கு ஏற்ற நகரங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.