சென்னை தி.நகரில் மதுபோதையில் வந்த திருநங்கையின் வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் தரக்குறைவாக திட்டியதால் மனமுடைந்தவர் ஸ்டேஷன் வாசலிலேயே தீக்குளித்து பலியானார்.

சென்னை சூளைமேட்டில் வசிப்பவர் தாரா(34) . நேற்றிரவு இவர் மற்ற திருநங்கைகளுடன் தி.நகர் அருளாம்பாள் இருந்துள்ளார். திருநங்கைகள் சாலையில் செல்வோருடன் பாலியல் தொழிலில் ஈடுபடுவதால் போலீசார் அவர்களை பார்த்தால் விரட்டி விடுவர்.

நேற்றிரவும் அதேபோல் திருநங்கைகள் இருந்த இடத்திற்கு போலீசார் வந்து விரட்டியுள்ளனர். இதில் மற்றவர்கள் ஓடிவிட தாரா போதையில் இருந்ததால் அவரால் போக முடியவில்லை. போலீசார் அவரை விசாரித்த போது போதையில் இருந்த தாரா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் போலீசார் அவரது வாகனத்தை பறிமுதல் செய்து காலையில் வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றுவிட்டனர்.

ஆனால் பாண்டிபசார் ஸ்டேஷனுக்கு சென்ற தாரா போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டு இருசக்கர வாகனத்தை கேட்டுள்ளார், அப்போது போலீசார் அவரை தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வெளியே சென்ற தாரா பெட்ரோலை வாங்கிகொண்டு பாண்டிபசார் ஸ்டேஷனுக்கு வந்து தன்மீது பெட்ரோலை ஊற்றிகொண்டு தீவைத்துகொண்டார்.

தீயின் வெம்மை தாளாமல் அங்கும் இங்கும் ஓடியவர் ஸ்டேஷன் வாசலிலேயே விழுந்தார். அவரை போலீசாரும் மற்ற திருநங்கைகளும் காப்பாற்றி கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு போலீசார் திட்டியதால் தீக்குளித்ததாக வாக்குமூலம் அளித்துவிட்டு மரணமடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் திரண்ட திருநங்கைகள் தாராவின் மரணத்திற்கு நீதி கேட்டு திரண்டனர்.

ஒரு கட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கட்டுப்படுத்த சிரமப்பட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஐஏஎஸ் அதிகாரி வாகனத்தை மறித்து கையால் தட்டி தகராறில் ஈடுபட்டனர்.