train ticket reservation started for diwali
இந்த ஆண்டு தீபாளிக்காக சென்னை மற்றும் வெளியூர்களில் இருந்தது இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 8 மணிக்கு தொடங்கியுள்ளது.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தை சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகைக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
இதில் பெரும்பாலேனோர் பண்டிகை நேரங்களில் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். அதனால் தீபாவளி, பொங்கல் மற்றும் பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு எப்போதும் கூட்டம் அலை மோதும்.

டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெற்கு ரயில்வே சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது.
அதேபோல, தீபாவளி சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதல் ரயில்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெற்கு ரயில்பே அறிவித்துள்ளது.
