தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான ரயில் முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு இந்திய ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் சிறப்பு ரயில்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது ஒருபுறம் இருக்க வழக்கமாக இயக்கப்படும் ரயில்களுக்கான முன்பதிவு 60 நாட்களுக்கு முன்னர் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் தீபாவளி பண்கைக்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
அதன்படி அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட உள்ள நிலையில், 17ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அக்டோபர் 18ம் தேதிக்கான முன்பதிவு செவ்வாய் கிழமையும், 19ம் தேதிக்கா முன்பதிவு புதன் கிழமையும் தொடங்கும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவில் சிக்கல்?
பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் எண்ணத்தில் ஒரே நேரத்தில் அதிகமான பயணிகள் முன்பதிவு செய்ய இணையதளத்தை நாடுவார்கள். இதனால் பல நேரங்களில் இணையதளம் முடங்கும் நிலை ஏற்படும். இதனை சரிசெய்யும் நோக்கில் ரயில்வே சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரே நேரத்தில் 1 லட்சம் பயணிகள் ரயிலில் முன்பதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
