Asianet News TamilAsianet News Tamil

வாகன ஓட்டிகள் விதியை மீறினாலும் பராவாயில்லை...! போலீசாருக்கு கமிஷனரின் அதிரடி உத்தரவு...! 

Traffic guards should not cease to arbitrarily park the vehicles and censor the documents
Traffic guards should not cease to arbitrarily park the vehicles and censor the documents
Author
First Published Jan 29, 2018, 9:36 PM IST


சென்னையில் போக்குவரத்து காவலர்கள் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தி ஆவணங்கள் தணிக்கை செய்யக்கூடாது எனவும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை எக்காரணத்தை கொண்டும் துரத்தி சென்று பிடிக்கக்கூடாது என்றும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் உத்தரவிட்டுள்ளார். 

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் சொகுசு ஓட்டல் பகுதியில்  போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 

அப்போது அங்கு காரில் வந்த இளைஞர் மணிகண்டன் என்பவர் சீட் பெல்ட் அணியாமல் வந்துள்ளார். அவரை பிடித்து வலுக்கட்டாயமாக போலீசார் கீழே இறக்கிவிட்டு விசாரணை செய்துள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த அந்த மணிகண்டனுக்கும் போலீசாருக்குமிடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. 

இதையடுத்து போலீசார் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியிலேயே மணிகண்டனை தாக்கியதாக கூறப்படுகிறது. 

விரக்தியடைந்த ஓட்டுநர் மணிகண்டன் காரில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார். 

இதைப்பார்த்த பொதுமக்கள் தீக்காயங்களுடன் துடித்த மணிகண்டன் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரை பணி நீக்கம் செய்து கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். 

இதைதொடர்ந்து சென்னையில் போக்குவரத்து காவலர்கள் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தி ஆவணங்கள் தணிக்கை செய்யக்கூடாது எனவும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை எக்காரணத்தை கொண்டும் துரத்தி சென்று பிடிக்கக்கூடாது என்றும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் விதிகளை மீறும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காவல் ஆணையர் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios