சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில்,  புதிய திட்டம் இன்று முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

சென்னையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் : தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக்கொண்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல நீண்ட நேரம் ஆகிறது. மேலும் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் அதிகமாக உள்ள பகுதியாக தரமணி உள்ளது. இந்த பகுதிகளுக்கு முன்பாக வாகன நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை போக்குவரத்து போலீசார் இன்று முதல் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தவுள்ளனர்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க சோதனை திட்டம்

ஆளுநர் மாளிகை அமைந்திருக்கக் கூடிய சர்தார் பட்டேல் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,சென்னை போக்குவரத்து காவல்துறை சர்தார் பட்டேல் சாலையில் செய்யப்பட உள்ள போக்குவரத்து மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் காந்தி மண்டபம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக, போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டு, 21.05.2025 (புதன்கிழமை) இன்று முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து மாற்றம்- இன்று முதல் சோதனை

  • ராஜ்பவனில் இருந்து சர்தார் படேல் சாலையில் மத்திய கைலாஷ் நோக்கி வரும் மாநகர பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் காந்தி மண்டபம் (ஐஐடி) மேம்பாலத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.
  • ராஜ்பவனில் இருந்து சர்தார் படேல் சாலையில் மத்திய கைலாஷ் நோக்கி வரும் மாநகர பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் காந்தி மண்டபம் (ஐஐடி) மேம்பாலத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.
  • காந்தி மண்டபம் சர்வீஸ் சாலையில் நுழையும் வாகனங்கள் காந்தி மண்டபம் சந்திப்பில் கட்டாயமாக இடதுபுறம் திரும்ப வேண்டும், மேலும் அவ்வாகனங்கள் நேராக (மத்திய கைலாஷ் நோக்கி) செல்ல அனுமதிக்கப்படாது.
  • இந்த மாற்றுப்பாதைகளை ஏற்படுத்த, சிஎல்ஆர்ஐ பேருந்து நிறுத்தம் ஏற்கனவே உள்ள இடத்திலிருந்து அடையாறு நோக்கி சற்று முன்னோக்கி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது