முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதியில் கோவில் கோபுரம் போல அலங்கரித்திருப்பதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. ஹிந்துக்களை இழிவுபடுத்தும் செயல் எனவும், சமாதியில் உள்ள கோபுரத்தை அகற்ற வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தியுள்ளது.

முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் சமாதியில் கோவில் கோபுரம் போல அலங்கரித்திருப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) 2025-26 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் விவாதத்தில், இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அமைச்சர் சேகர்பாபு முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் மு. கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை நடைபெறுவதை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுரம் போல செட் அமைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜகவினர் கடும் கண்டனர் தெரிவித்து வருகின்றனர்.

ஜென்சோல் கடன் மோசடி: இந்திய ஸ்டார்ட்அப் சூழலில் புயலைக் கிளப்பும் வழக்கு!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

Scroll to load tweet…

"அநியாயத்திற்கு ஒரு அளவே இல்லையா? திராவிட மாடல் அரசின் அராஜகத்திற்கு எல்லையே இல்லையா? கருணாநிதியின் சமாதியில் கோவில் கோபுரத்தை வரைந்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. ஓட்டு மொத்த ஹிந்துக்களை இழிவுபடுத்தும் செயல் இது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக இந்த செயலை கண்டிப்பதோடு, சமாதியின் மீது உள்ள கோபுரத்தை அகற்ற உத்தரவிட வேண்டும். ஹிந்து விரோத திமுக அரசே, ஆலயத்தை விட்டு வெளியேறு. இந்த நாள் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சமாதி கட்ட துவங்கிய நாளாகட்டும்."

இவ்வாறு நாராயணன் திருப்பதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ரகசிய வேலைகளில் இறங்கும் எலான் மஸ்க்; கடுப்பான டொனால்டு டிரம்ப்!