Asianet News TamilAsianet News Tamil

கவனத்திற்கு !! கன்னியாகுமரியில் இங்கெல்லாம் சுற்றுலா பயணிகள் செல்ல தடை.. காரணம் இது தான்..

கன்னியாகுமரியில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tourists are not allowed in Kanyakumari today
Author
First Published Sep 7, 2022, 11:11 AM IST

இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி, காங்கிரஸ் சார்பில்  ”இந்தியாவை ஒற்றிணைப்போம்” என்னும் பாதை யாத்திரை நடத்தப்படவுள்ளது. ராகுல்காந்தி தலைமையில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையில் இன்று தொடங்கவுள்ளது.

இன்று மாலை கன்னியாகுமரியில் இதற்கான தொடக்கவிழா நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு, தேசியக்கொடியை அசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

முன்னதாக தமிழகம் வந்துள்ள ராகுல்காந்தி, இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமரும் தந்தையுமான ராஜுவ் காந்தி நினைவிடத்தில் முதல்முறையாக அஞ்சலி செலுத்தினார்.இன்று முதல் 150 நாட்கள் சுமார் 3600 கி.மீ ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் மேற்கொள்கின்றனர். 

மேலும் படிக்க:19 ஆண்டுகளுக்கு பிறகு தந்தையின் நினைவிடத்தில் ராகுல் மலர்தூவி மரியாதை.. நடைபயணத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்.!

இந்நிலையில் யாத்திரையில் அதிகளவில் காங்கிரஸ் தொண்டர்கள் கூடுவதால், பாதுகாப்பு கருதி கடற்கரை சாலை, காந்தி மண்டபம், திருவேணி சங்கமம் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க:கோ பேக் ராகுல்... ரயிலில் தூங்கிய ஆர்ஜூன் சம்பத்...! நள்ளிரவில் தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios