Asianet News TamilAsianet News Tamil

RTE மாணவர் சேர்க்கைக்கு சீக்கிரம் விண்ணப்பியுங்கள்... நாளையே கடைசி!!

தமிழகத்தில் RTE மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி என்பதால் விண்ணப்பிக்க விரும்புவோர் அதன் இணையதள பக்கத்தில் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

tomorrow is the last date for applying for RTE student admission
Author
Tamilnadu, First Published May 24, 2022, 7:03 PM IST

தமிழகத்தில் RTE மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி என்பதால் விண்ணப்பிக்க விரும்புவோர் அதன் இணையதள பக்கத்தில் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் (Right To Education) கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும். இந்த திட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. https://rte.tnschools.gov.in/ என்ற இணையதள பக்கத்தில்  விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கு, மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களை இணையதளத்தில் பதவிவேற்றம் செய்ய வேண்டும். இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆகும் செலவினங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசே வழங்கி வருகிறது.

tomorrow is the last date for applying for RTE student admission

இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. நாடு முழுவதும் 2010 ஆம் ஆண்டு இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. தமிழக அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு  கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தியது. இந்த 25 சதவீத இட ஒதுக்கீட்டில் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள், எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்பது தொடர்பான விவரங்களைப் பொதுவெளியில் தனியார் பள்ளிகள் அறிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பெற்றோர் மத்தியில் பரவலாக எழுந்தது. செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே சிறப்பு ஒதுக்கீட்டில் இடம் கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்ப முறை 2017 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

tomorrow is the last date for applying for RTE student admission

இந்த நிலையில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மே 18 வரை இருந்த நிலையில் அது மே 25 தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதை அடுத்து RTE மாணவர் சேர்க்கைக்கு நாளையே கடைசி தேதி. சட்டப்படி சேர்க்கை கோரும், குழந்தைகளின் பெற்றோர் பள்ளி கல்வித்துறையின் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால் பெற்றோருக்கு ஒப்புகை சீட்டை தவறாது வழங்க வேண்டும். விண்ணப்பங்களைப் பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம். இதுதவிர, முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios