அலர்ட் !! நாளை மறுநாள் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை.. எதற்கு தெரியுமா..?
நெல்லையப்பர் கோவில் ஆனிபெருத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை மறுநாள் ( ஜூலை 11 ஆம் தேதி) நடைபெறவுள்ளதால், அன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் பிரசிதிப்பெற்றது.இக்கோவில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஆனிப் பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இவ்விழாவிற்கு வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களிலிருந்தும் எராளமான மக்கள் வருவர். இதனால் திருவிழா நாட்களில் நெல்லை மாநகரமே களைக்கட்டிவிடும். மேலும் மக்கள் கூட்டத்தை கட்டுபடுத்த, போலீஸ் பாதுகாப்பும் பலத்தப்படும்.
மேலும் படிக்க:மாணவர்களே அலர்ட் !! மாதந்தோறும் ரூ.1000 திட்டம்.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி..
நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறவில்லை. இந்தாண்டு பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெறுகிறது.
மேலும் படிக்க:சென்னையில் 10 நாட்களுக்கு எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றம்? இதோ முழு விவரம்..!
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. எனவே வரும் ஜூலை 11ம் தேதியன்று அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உத்தரவுகளை பிறப்பித்துள்ள அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, ‘தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் வரும் ஜூலை 11ம் தேதியன்று நடைபெற இருக்கிறது.
மேலும் படிக்க:அம்மாடியோவ்.. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் இத்தனை கோடிகளுக்கு ஆடுகள் விற்பனையா?
இந்த நிகழ்வை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த நாளில் ஏதேனும் அரசு பொதுத்தேர்வுகள் இருந்தால் அம்மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும். இதற்கிடையில் இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் வரும் ஜூலை 23ம் தேதியன்று பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் வேலை நாளாக செயல்படும்’ என்று தெரிவித்துள்ளார்.