சென்னையில் 10 நாட்களுக்கு எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றம்? இதோ முழு விவரம்..!

 ஈ.வெ.ரா சாலையானது சென்னையில் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். பெருகி வரும் வாகன போக்குவரத்தால் காலை மற்றும் மாலை வேலைகளில் இச்சாலையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  எனவே ஈ.வெ.ரா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாளை முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்து சோதனை ஓட்டமாக அமல்படுத்தப்பட உள்ளது.

Which roads in Chennai will have traffic changes for 10 days? Here is the full details..!

சென்னை ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்று முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

இதுகுறித்து, போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை;-  ஈ.வெ.ரா சாலையானது சென்னையில் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். பெருகி வரும் வாகன போக்குவரத்தால் காலை மற்றும் மாலை வேலைகளில் இச்சாலையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  எனவே ஈ.வெ.ரா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாளை முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்து சோதனை ஓட்டமாக அமல்படுத்தப்பட உள்ளது. 

இதையும் படிங்க;- பிரபல ஹோட்டல் சாப்பாட்டில் பேண்டேஜ்.. அலட்சியம் காட்டிய ஊழியர்கள்.. உரிமையாளர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

Which roads in Chennai will have traffic changes for 10 days? Here is the full details..!

கோயம்பேட்டிலிருந்து அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடதுபுறமாக திருப்பி விடப்படும்.  இந்த வாகனங்கள் அண்ணா ஆர்ச் மேம்பாலத்தின் கீழ் சுமார் 75 மீட்டர் சுற்றுப்பாதையில் யு டர்ன் செய்து மேற்கொண்டு ஈவெரா சாலையை அடைந்து அமைந்தகரைக்கு செல்ல வேண்டும். நெல்சன்  மாணிக்கம் சாலைக்கு செல்ல விரும்புவோர் மேம்பாலத்தின் வழியாக சென்று அடையலாம்.

அமைந்தகரையில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் சந்திப்பில் பாதசாரி கடக்கும்போது தவிர தடையின்றி செல்லலாம். அண்ணாநகரில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகனங்கள், அண்ணா ஆர்ச் வளைவில் வலதுபுறம் திரும்பும் போது, பாதசாரி கடக்கும்போது தவிர, இடையூறு இல்லாமல் தொடர்ந்து செல்லலாம். கோயம்பேட்டில் இருந்து செல்லும் வாகனங்கள் அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் வலதுபுறம் திரும்பும் வகையில் அண்ணா ஆர்ச்சில் யு டர்ன் எடுத்து, அண்ணா வளைவில் வலதுபுறம் திரும்பி அரும்பாக்கத்தை அடையும். இதன் மூலம் அரும்பாக்கம் அருகே உள்ள ஈவெரா சாலையிலும் நெரிசல் குறையும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இதையும் படிங்க;- மதுராந்தகம் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து.. 6 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு.!

வடபழனியில் மாற்றம்:

இதுபோல, 100 அடி சாலை வடபழனி சந்திப்பிலிருந்து அசோக் பில்லர் வரை போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் நோக்கத்தில் நாளை முதல் போக்குவரத்து மாற்றங்கள் பரீட்சார்த்த முறையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட உள்ளது. 100 அடி சாலை 2வது நிழற்சாலை சந்திப்பிலிருந்து 4வது நிழற்சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அசோக் பில்லர் வழியாக கோயம்பேடு, வடபழனி மற்றும் கே.கே.நகர் செல்லும் வாகனங்கள் எந்தவித மாற்றமும் இன்றி வழக்கம் போலச்செல்லலாம்.

அசோக் பில்லர் வழியாக தி.நகர் மற்றும் கோடம்பாக்கம் நோக்கிச்செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, 4வது நிழற்சாலை மற்றும் அம்பேத்கர் சாலை வழியாக செல்லலாம். கோயம்பேடு மற்றும் வடபழனி வழியாக அசோக் பில்லர் நோக்கிச்செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, 4வது நிழற்சாலை வழியாகச் சென்று, கவிஞர் சுரதா சிலை அருகில் 100 அடி சாலையை அடைந்து அசோக் பில்லர் நோக்கிச்செல்லலாம்.

வடபழனியிலிருந்து தி.நகர் செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி 4வது நிழற்சாலை வழியாக தி.நகர் அடையலாம். பி.டி.ராஜன் சாலை X பி.வி.ராஜமன்னார் சாலை சந்திப்பிலிருந்து 2வது நிழற்சாலை X 100 அடி சாலை வரை தற்பொழுதுள்ள ஒரு வழிப்பாதை மாற்றப்பட்டு இருவழி பாதையாக நடைமுறைப்படுத்தப்படும். மேற்படி பி.டி.ராஜன் சாலை X ராஜமன்னார் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் நேராக 2வது நிழற்சாலை X 100அடி சாலையை அடைந்து நேராக 2வது நிழற்சாலை வழியாக தி.நகர் மற்றும் அசோக்பில்லர் செல்லலாம்.

Which roads in Chennai will have traffic changes for 10 days? Here is the full details..!

வடபழனி மார்க்கத்திலிருந்து கே.கே.நகர் செல்ல வேண்டிய வாகனங்கள் 2வது நிழற்சாலை சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி 4வது நிழற்சாலை வழியாக 3வது மற்றும் 6வது நிழற்சாலை அடைந்து 100அடி சாலையில் வலது புறம் திரும்பி கே.கே.நகரை பி.டி. ராஜன் சாலை வழியாக அடையலாம். கோடம்பாக்கம் மற்றும் தி.நகர் மார்க்கத்திலிருந்து வடபழனி மற்றும் கோயம்பேடு செல்ல வேண்டிய வாகனங்கள் 4வது நிழற்சாலை வழியாக, 3வது மற்றும் 6வது நிழற்சாலை வழியாக 100அடி சாலை வலதுபுறம் திரும்பி செல்லவேண்டிய வழித்தடத்தில் செல்லலாம்.  இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் போக்குவரத்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.16, டீசல் ரூ.18..! தயார் நிலையில் 40 ஆயிரம் லிட்டர்..? மீண்டும் வந்த ராமர் பிள்ளை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios