மாணவர்களே அலர்ட் !! மாதந்தோறும் ரூ.1000 திட்டம்.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி..
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க நாளை கடைசிநாளாகும். அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்கல்வி பயில ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. ]நடப்பு கல்வி ஆண்டிலே முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளன்று ஜூலை 15 ஆம் தேதி இத்திட்டத்தை தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு தகுதியுடைய மாணவிகள் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் சிறப்பு முகாமை கடந்த ஜூன் 25 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.
மேலும் படிக்க:உயர்கல்வி ஊக்கத்தொகை திட்டம்.. மாதந்தோறும் ரூ.1000.. ஒரே நாளில் 15 ஆயிரம் மாணவிகள் விண்ணப்பம்..
இந்த முகாமில் மாணவிகளின் வங்கிக் கணக்கு விவரங்கள், பயின்ற அரசுப் பள்ளி விவரங்கள், மாணவிகள் ஆதாா் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் ஆகிய விவரங்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டன. விண்ணப்பப் பதிவு தொடங்கிய முதல் நாளில் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டதாக உயா்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
மேலும் படிக்க:மாணவர்களே உஷார் !! பி.இ கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் சொன்ன புது தகவல்..
பின்னர் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மாணவிகள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜூலை 10 ஆம் தேதி உயர்கல்வித்துறை நீட்டித்தது. அதன்படி உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க நாளை கடைசிநாளாகும். இதுவரை இத்திட்டத்தில் 2 லட்சம் மாணவிகல் விண்ணப்பித்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:மாணவர்கள் கவனத்திற்கு!! பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு.. முழு விபரம்..