Asianet News TamilAsianet News Tamil

மாணவர்கள் கவனத்திற்கு!! பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு.. முழு விபரம்..

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப்பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 418 பொறியியல் கல்லூரிகளுக்கான தர வரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப்பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக பொறியியல் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. 

Tnea college rank list 2022 released
Author
Tamilnádu, First Published Jul 8, 2022, 11:49 AM IST

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப்பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 418 பொறியியல் கல்லூரிகளுக்கான தர வரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப்பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக பொறியியல் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. 

மேலும் படிக்க:பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்.. கலந்தாய்வு குறித்து முக்கிய தகவல்.. முழு விவரம்

கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பி தேர்ந்தெடுக்கக்கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தற்போது வெளியிடப்பட்டுள்ள கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை பார்த்து தங்கள் கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக் தமிழக பள்ளிக்கல்வித் பாடத்திட்டத்தின் கீழ் கடந்த ஜுன் 20 ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதனை தொடர்ந்து தேர்வு முடிவு வெளியான அன்று இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடங்கியது.  பி.இ.,பி.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்பத்தை மாணவர்கள் http:/www.tneaonline.org என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:ஜூலை 18ல் கல்லூரிகள் திறப்பு.. முதலாமாண்டு பொறியியல் வகுப்பு எப்போது..? அமைச்சர் அறிவிப்பு..

ஜூலை 19 ஆம் தேதி வரை மாணவர்கள் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.  ஜூலை 22 ஆம் தேதி சம வாய்ப்பு எண்ணும், ஜுலை 20 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை சேவை மையம் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, பின்னர் கலந்தாய்வு தொடங்கும்.  ஆகஸ்ட் 9 முதல் 14 ஆம் தேதி வரை மாணவர்கள் சேவை மையம் வாயிலாக குறைகளை சரிசெய்து கொள்ளலாம்.

கலந்தாய்வை பொறுத்தவரையில் ஆக.,16 முதல் ஆக.18 ஆம் தேதி வரை  மாற்றுதிறனாளி, முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கு  நடைபெறுகிறது. தொடர்ந்து ஆக.22 முதல் 14 ஆம் தேதி வரை பொதுகல்வி, தொழில்முறை கல்வி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு ஆகிய 3 பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும். துணை கலந்தாய்வு அக்டோபர் மாதம் 15,16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இதுவரை ஒன்றரை லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 
மேலும் படிக்க:அனைத்து கல்லூரிகளும் ஜூலை 18-ல் திறப்பு.. அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது..? வெளியான முக்கிய தகவல்.

Follow Us:
Download App:
  • android
  • ios