மாணவர்களே உஷார் !! பி.இ கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் சொன்ன புது தகவல்..
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் வரை கலை மற்றும் அறிவியல், பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை எனவும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்.. கலந்தாய்வு குறித்து முக்கிய தகவல்.. முழு விவரம்
சென்னை தலைமை செயலகத்தில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால், பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் தேதி குறிப்பிடாமல் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதே போல் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் வரும் 17 ஆம் தேதி நிறைவடையுள்ளநிலையில், அதற்கான கால அவகாசம் தேதி குறிப்பிடாமல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:மாணவர்கள் கவனத்திற்கு!! பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியீடு.. முழு விபரம்..
தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் சேர இதுவரை 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக கூறிய அவர், உயர்கல்வி உறுதி திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கான 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் இதுவரை 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக அவர் கூறினார். அதேபோல் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு இதுவரை ஒன்றரை லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.