அம்மாடியோவ்.. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் இத்தனை கோடிகளுக்கு ஆடுகள் விற்பனையா?
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்பட உள்ளது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்த நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து உண்டு மகிழ்வது வழக்கம்.
பக்ரீத் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்பட உள்ளது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்த நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து உண்டு மகிழ்வது வழக்கம். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆட்டு சந்தைகளில் விற்பனை களைகட்டியது.
இதையும் படிங்க;- தேனியில் ஒரே பள்ளி மாணவர்கள் 31 பேருக்கு கொரோனா..! பள்ளியை மூடிய அதிகாரிகள்..அதிர்ச்சியில் பெற்றோர்..
இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளியில் மாபெரும் ஆட்டுசந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, ஆத்தூர், ஈரோடு மட்டுமின்றி ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் விவசாயிகள் ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் மட்டுமின்றி, குருபர ஆடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் கொண்டு வந்தனர்.
ஆடுகளை வாங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஒரே நேரத்தில் குவித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். பக்ரீத் பண்டிகை என்பதால் இதில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆட்டுக் கிடாய்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையில் தரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் வழக்கத்தை விட பக்ரீத் பண்டிகை என்பதால் ஆடுகளின் விலை அதிகரித்து உள்ளதால் ஆட்டு இறைச்சி விலை கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்ய நேரிடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த ஆட்டு சந்தையில் சுமார் 10,000 ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- பெண்கள் விவகாரத்தில் ஜெயக்குமார் எப்படிப்பட்டவர் தெரியுமா? ரகசியத்தை உடைத்த கோவை செல்வராஜ்..!