தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் நாளை (ஜன.2) மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், இன்று வறண்ட வானிலை காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

இலங்கை அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, மேற்கு திசையில் நகர்ந்து, மாலத்தீவுக்கு அருகில் உள்ளது. இதன் காரணமாக, ஜனவரி நாளை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
தாய்லாந்து அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை, இன்று அந்தமான் அருகே வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், சில நாட்களுக்கு பின்புதான் தமிழகத்தில் தெரியக்கூடும். இருப்பினும் அதிக மழையை எதிர்பார்க்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.