- Home
- Tamil Nadu News
- இனி 'இந்த' இருமல் மருந்து கிடைக்காது.. தமிழக அரசு அதிரடி தடை.. பின்னணியில் பகீர் காரணம்!
இனி 'இந்த' இருமல் மருந்து கிடைக்காது.. தமிழக அரசு அதிரடி தடை.. பின்னணியில் பகீர் காரணம்!
எத்திலீன் கிளைகால் வேதிப்பொருள் பெயிண்ட், மை. ஆயில் போன்றவற்றைத் திரவமாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு ரசாயனம் ஆகும். இருமல் மருந்தில் இந்த வேதிப்பொருளை அதிக அளவில் சேர்க்கும்போது அது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அல்மாண்ட் கிட் இருமல் மருந்துக்கு தடை
தமிழகத்தில் அல்மாண்ட் கிட் (Almont Kid) எனப்படும் இருமல் மருந்து விற்பனை செய்ய தமிழக அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. பீகாரை சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரிக்கும் 'அல்மாண்ட் கிட்' இருமல் மருந்தில் 'எத்திலீன் கிளைகால்' என்ற நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டதால் தமிழக மருந்து கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு தடை விதித்துள்ளது.
எத்திலீன் கிளைகால் வேதிப்பொருள் அதிகம்
எத்திலீன் கிளைகால் வேதிப்பொருள் பெயிண்ட், மை. ஆயில் போன்றவற்றைத் திரவமாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு ரசாயனம் ஆகும். குழந்தைகள் உட்கொள்ளும் இருமல் மருந்தில் இந்த வேதிப்பொருளை அதிக அளவில் சேர்க்கும்போது அது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது குழந்தைகளுக்கு சிறுநீரகச் செயலிழப்பு, இதயம் மற்று நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் வரலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
விற்பனை செய்யக்கூடாது
ஆகவே குழந்தைகளின் உயிருக்கே உலை வைக்கும் அல்மாண்ட் கிட் இருமல் மருந்தை மருத்துமனைகள், மருந்து கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் உத்தரவையும் மீறி அல்மாண்ட் கிட் இருமல் மருந்து விற்பனை செய்வதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் உள்ள மருந்து கடைகளில் தீவிர சோதனைகள் நடத்த மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
வீடுகளில் அல்மாண்ட் கிட் இருமல் மருந்து இருந்தால் உடனே அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் ஒருவேளை குழந்தை இந்த மருந்தை உட்கொண்டிருந்தால் மருத்துவரை சந்திக்கும்படியும் பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகளில் அல்மாண்ட் கிட் இருமல் மருந்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால் உடனே புகார் தெரிவிக்கும்படியும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

