ஜூலை 1 ஆம் தேதி முதல் ராஜீவ் காந்தி சாலை சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை ஒன்றாம் தேதி முதல், 10 சதவிகிதம் கட்டணம் உயருகிறது. மூன்று சக்கர வாகனம் ஒரு முறை சென்று திரும்ப 17 ரூபாயும், ஒரு நாள் பாஸ் ரூ.30
ஆகவும் விலை உயர்த்தப்பட உள்ளது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டண விகித நிர்ணயம் மற்றும் வசூல் சட்டத்தின்படி
ஆண்டு தோறும் கட்டணங்கள் உயர்த்தப்படும். 

அந்த வகையில் ராஜீவ் காந்தி சாலை சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது என்றார். 

ஏற்கனவே பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், சுங்க கட்டண உயர்வு அறிவிப்பால் வேதனை தெரிவித்து வருகின்றனர்.