Tiruchanur Crime: திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி சோதனை சாவடியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், காரில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் ஆகும். 

வெளிமாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் திருச்செந்தூர் பகுதிக்கு சட்டவிரோதமாக காரில் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலைய சோதனை சாவடியில் திருச்செந்தூர் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வெளிமாநிலங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பகுதியில் விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட தடை செய்யப்பட்ட 400 கிலோ எடை கொண்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ஆகும்.

இதனையடுத்து காரில் வந்த 5 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளுக்கு இதனை விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஐந்து பேரும் ஆறுமுகநேரி, உடன்குடி பகுதியை சேர்ந்த சாந்தகுமார், அரிகிருஷ்ணன், சங்கர், மகாலிங்கம், வசீகரன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்செந்தூர் அருகே சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 10 லட்சம் மதிப்பிலான 400 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.