today holiday for private concerns in chennai
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான தனியார் நிறுவனங்களில் , பல்வேறு ஊர்களில் இருந்து வந்து பணியாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த மாவட்டங்களில் தான் மிகவும் அதிகளவிலான தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், தமிழக அரசின் தொழிலாளர் துறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வரும் தொழில் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்க வேண்டும் என அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட தகுந்த நேரத்தில் செல்வதற்காக சிறப்பு விடுமுறை அளிக்க வேண்டும். தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு வசதியாக விடுமுறை அளிக்க வேண்டும் என தொழில் நிறுவனங்களுக்கு என உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
