டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு.!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வு குறித்து முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளது.
துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் , கூட்டுறவு துணைப் பதிவாளர் , ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், மாவட்டத் தீயணைப்பு அதிகாரி என மொத்தம் 6 வகையான குரூப் 1 பணிகளுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த ஆள் சேர்ப்பேன் மூலம் 92 பதவிகள் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு..அச்சச்சோ.! முகத்தில் 200 தையல்கள்.. 11 வயது சிறுவனை ஆக்ரோசமாக கடித்த பிட்புல் நாய் - அதிர்ச்சி வீடியோ !
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்புமுடித்திருக்க வேண்டும். வணிகவியல், பொருளாதாரம், சமூகவியல் போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு சில பதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.முதல் நிலைத்தேர்வு(Prelims), முதன்மைத் தேர்வு(Mains) மற்றும் நேர்காணல்(Interview) ஆகிய 3 கட்டங்களில் தேர்வு நடைபெறும்.
மேலும் செய்திகளுக்கு..பிக் பாஸ் பிரபலம் கொலைவழக்கில் கடைசியில் நடந்த திருப்பம்.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !
முதல்நிலைத் தேர்வு இம்மாத இறுதியில் (செப்டம்பர் 30) நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘30.10.2022 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த முதல்நிலைத் தேர்வானது, நிர்வாகக் காரணங்களுக்காக 19.11.2022 அன்று முற்பகல் நடைபெறும்’ என்று தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு..500 மில்லியன் டாலர் சொத்து.. பாஸ்போர்ட் இல்லாமலே வெளிநாடு போகலாம் - மன்னர் சார்லசுக்கு இவ்வளவு வசதிகளா ?