அச்சச்சோ.! முகத்தில் 200 தையல்கள்.. 11 வயது சிறுவனை ஆக்ரோசமாக கடித்த பிட்புல் நாய் - அதிர்ச்சி வீடியோ !
வீடுகளில் வளர்க்கப்படுகிற செல்லப்பிராணிகளில் முக்கியமானது நாய். குடும்பத்தில் ஒருவராகவே பல வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுகின்றன.
பல சமயங்களில் நாய்களால் அக்கம்பக்கத்தினருக்கு ஆபத்து ஏற்படலாம். அதிலும் ஆக்ரோஷ குணம் கொண்ட நாய் வகைகளை வளர்ப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனர். காரணம் அவை சில நேரங்களில் ஆக்ரோஷமாக நடப்பதால் தான்.
தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிட் புல் என்ற வகை நாய் தாக்கியதில், 11 வயது சிறுவனுக்கு முகத்தில் 200 தையல்கள் போடப்பட்ட சம்பவம் தான் அது. கடந்த வாரம் காஜியாபாத்தில் உள்ள தனது வீட்டின் அருகே உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் மீது செல்லப் பிராணியான பிட் புல் நாய் தாக்கியது.
மேலும் செய்திகளுக்கு..ஒன்றிணைவோம் வா.. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இவர்தான்.! எடப்பாடியா? பன்னீரா? குழப்பத்தில் ர.ரக்கள்
இந்த தாக்குதலில் சிறுவனின் முகத்தில் கிட்டத்தட்ட 200 தையல்கள் போடப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. அந்த காட்சியில், 'வீட்டுக்கு வெளியே உள்ள பூங்காவில் சிறுவன் வீடியோவில் விளையாடிக்கொண்டிருக்கும் போது பெண் உரிமையாளர் ஒருவர் அழைத்து வரும் பிட்புல் இன நாய் திடீரென விரைந்து சிறுவனை தாக்குகிறது.
அதில் சிறுவனின் முகம் மற்றும் காது பகுதிகளில் காயமடைந்துள்ளான் அந்த சிறுவன். உரிமம் மற்றும் பதிவு இல்லாமல் கால்நடைகளை வளர்த்த நாயின் உரிமையாளருக்கு ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட, காஜியாபாத்தில் ஹவுசிங் சொசைட்டி லிப்டில் ஒரு சிறுவனை நாய் கடித்தது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு..எடப்பாடி போன அதே இடம்.. ‘வேற’ மாறி பிளான் போட்ட பன்னீர்.. ஆடிப்போன ஈபிஎஸ் தரப்பு - இதுதான் காரணமா!