எடப்பாடி போன அதே இடம்.. ‘வேற’ மாறி பிளான் போட்ட பன்னீர்.. ஆடிப்போன ஈபிஎஸ் தரப்பு - இதுதான் காரணமா!

அதிமுகவில் கூட்டுத் தலைமையே சரி என ஓபிஎஸ்ஸும் ஒற்றை தலைமையைத்தான் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என எடப்பாடி பழனிசாமியும் மல்லுக்கட்டி வருகிறார்கள்.

aiadmk o panneerselvam went to palani worship lord murugan after eps visit

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தது. அப்போது  ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓபிஎஸ். ஆவணங்களை எடுத்து சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையில் புகார் அளித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி சண்முகம் நேற்று கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  இன்று சிபிசிஐடி போலீசார் அதிமுக அலுவலகத்தில் சோதனை செய்தனர். ஆகஸ்ட் 8 ஆம் தேதி பழனி மலைக்கோயிலில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு வழிபாடு நடத்தினார். அதன்பின், காலசாந்தி மற்றும் சிறுகாலசந்தி போன்ற முக்கிய பூஜைகளை மேற்கொண்டார். பின்னர், கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அதன்பின், போகர் சன்னதியில் சென்று தரிசனம் செய்து விட்டு சிறிது நேரம் தியானம் செய்தார். 

மேலும் செய்திகளுக்கு..ஒன்றிணைவோம் வா.. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இவர்தான்.! எடப்பாடியா? பன்னீரா? குழப்பத்தில் ர.ரக்கள்

பிறகு, அங்கு கோவிலில் மக்கள் அமர்ந்து ஓய்வு எடுக்கும் இடத்தில் இவரும் அமர்ந்து ஓய்வு எடுத்தார். அன்று இரவு பழனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆளுங்கட்சியான திமுக, ஓபிஎஸ், சசிகலா என  எல்லா பக்கங்களிலும் கடுமையாக விமர்சித்து சிக்ஸர் அடித்தார் எடப்பாடி பழனிசாமி.  இந்த நிலையில் நேற்று ஓ. பன்னீர்செல்வம் பழனிக்கு சென்று, முருகனை வழிபட்டார். இந்த செய்திதான் தற்போதைய ஹாட் டாபிக்.

பழனியில் தங்கத்தேர் இழுத்து அவர் வழிபாடு செய்தார். இதனை பார்த்த ஏராளமான பக்தர்கள், ஓ. பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு மலைக்கோவிலில் இருந்து ரோப்கார் மூலம் அடிவாரம் வந்த அவர், அங்கிருந்து காரில் ஏறி தேனிக்கு புறப்பட்டு சென்றார். இந்த வழிபாட்டில் முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம் உள்பட ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். 

இதேபோல் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பியுமான ஓ.பி ரவீந்திரநாத், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தங்கத்தேர் இழுத்து வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமி வந்ததை போல, ஓ.பன்னீர்செல்வமும் வந்துள்ளது திண்டுக்கல் அதிமுகவினரிடம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அதிமுகவினரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிசாமியும் சரி, ஓ.பன்னீர்செல்வமும் சரி இருவரும் ஆன்மீகத்தில் அதீத நாட்டமுடையவர்கள் ஆவார்கள். எது எப்படியோ பழனி முருகன் அருள் யாருக்கு கிடைக்க போகிறதோ தெரியவில்லை.

மேலும் செய்திகளுக்கு..அதிமுக அலுவலகத்தில் எடுக்கப்பட்ட அந்த பொருள் ? சிபிசிஐடி வெளியிட்ட முக்கிய தகவல் !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios