அதிமுக அலுவலகத்தில் எடுக்கப்பட்ட அந்த பொருள் ? சிபிசிஐடி வெளியிட்ட முக்கிய தகவல் !!
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தது.
அப்போது ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓபிஎஸ். ஆவணங்களை எடுத்து சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையில் புகார் அளித்தார்.
அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலக மோதல், கலவரம், ஆவணங்கள், சொத்துகள் சூறை தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான நான்கு வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு..பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - முதல்வர் ஸ்டாலின் எப்போது தொடங்கி வைக்கிறார் ? வெளியான தகவல்!
சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் நேற்று கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘அதிமுக அலுவலக கலவரம், மற்றும் அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும் இதுவரை விசாரணையை தொடங்கவில்லை. குற்றச் செயல் நடந்த இடத்திற்கு வந்து போலீசார் பார்வையிடாதது அதிர்ச்சியளிக்கிறது.
பகல் நேரத்தில் கேமராக்களுக்கு முன்பாகவும், கதவுகளை உடைத்தும் கொள்ளையடித்த நபர்களுக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் இருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருடப்பட்ட பொருட்களை மீட்பது தொடர்பாகவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் சென்ற 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குறிப்பாக அந்த அலுவலகம் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களும் ஆதாரங்களை சேகரித்தனர் ஒவ்வொரு அறையில் இருந்தும் ஆவணங்கள் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு இருப்பது பற்றி கணக்கு எடுத்துள்ளார்கள். அறைகள் சூறையாடப்பட்டு கிடக்கும் விதத்தினையும் சிபிசிஐடி போலீஸ் பதிவு செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு..ஒன்றிணைவோம் வா.. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இவர்தான்.! எடப்பாடியா? பன்னீரா? குழப்பத்தில் ர.ரக்கள்
ஆய்வு செய்யும் காட்சிகள் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது போட்டோவும் எடுக்கப்பட்டுள்ளது. சில அறைகளில் சிபிசிஐடி போலீசார் நீண்ட நேரம் ஆய்வு நடத்தியுள்ளனர். சில அறைகளில் ஏற்கனவே என்னென்ன பொருட்கள் இருந்தன என்பது குறித்து கேட்டறிந்து உள்ள கொண்டுள்ளார்கள். சிபிசிஐடி போலீசார் சோதனையின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உடன் இருந்துள்ளார். சூறையாடப்பட்ட அறைகளில் காணாமல் போன பொருட்கள் பற்றி அவர் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் நேரில் ஆய்வு செய்துள்ளனர். இந்த சோதனையின் போது வெளியில் இருந்து யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காணாமல் போனதாக கூறப்பட்ட வெள்ளி வேல், அதிமுக அலுவலகத்தில் தான் இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. திமுக அலுவலகம் எந்தளவுக்கு சேதமடைந்துள்ளது என்பதை ஆய்வு செய்தும், சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்த அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
மேலும் செய்திகளுக்கு..உனக்கு 23 எனக்கு 35.. அண்ணியுடன் கள்ளக்காதல் - மதுரை ஜோடிக்கு ஏற்பட்ட விபரீதம்