நாளை முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், மாதிரி பள்ளிகளுக்கான வேலை நேரம் மற்றும் விழிகாட்டுதல்கள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த கல்வி ஆண்டில் கொரோனா ஊரடங்கு கொஞ்ம் தளர்த்தப்பட்டதையடுத்து பள்ளிகள் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் ஆண்டு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கபட்டு கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. தற்போது கோடை விடுமுறைக்குப் பின்னர் நாளை மறுநாள் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், திடீரென அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படும் என வதந்தி பரவியது.

இதைத்தொடர்ந்து, கும்பகோனத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கோடை விடுமுறைக்குப் பின்னர் வரும் 13ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திட்டமிட்டமடி திறக்கப்படும் என்று தெரிவித்தார். பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் நடபைறபெருவதாகவும் தெரிவித்தார். தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், அவ்வாறு வசூல் வேட்டை நடத்தும் பள்ளிகள் குறத்து புகார் வந்தால், சம்பத்தபட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

மேலும், புதிய கல்வியாண்டில் (2022-2023) பள்ளிகளின் வேலை நேரம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

  • பள்ளி தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாகவே உடற்கல்வி ஆசிரியர்கள் வருகைதந்து மாணவர்களின் ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும்.
  • மதிய உணவு இடைவேளை முடிந்தபின் 20 நிமிடம் நூலகங்களில் சிறார் பருவ இதழ், செய்தித்தாள், நூல்களை வாசிக்க செய்ய வேண்டும்.
  • வாரம் ஒருநாள் நீதிபோதனை பாடவேளையில் மனநல ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
  • ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும். அதற்குமுன் பெற்றோர் கூட்டம் நடத்தி குழந்தைகள் கல்வி செயல்பாடு குறித்து அவர்களிடம் சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படுமா ? அதிகரிக்கும் கொரோனா.. தேதி மாறுமா ?

பள்ளி வேலை நேரம்

1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு காலை 9.10 முதல் மாலை 4.10 மணி வரை வகுப்புகள் நடத்தலாம். இதேபோல் 11, 12- ம் வகுப்புகளுக்கு காலை 9 முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடத்தலாம். இதில் முதல் 30 நிமிடம் காலை வணக்கம் கூட்டத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

எனினும், பள்ளிகள் தங்களின் அமைவிடம் போக்குவரத்து வசதிகளை கருத்தில்கொண்டு வகுப்புகள் தொடங்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம். வழிமுறைகளை முறையாக பின்பற்றவும் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜூன்-13ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்! - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதி!!