நாளை மறுநாள் ஜூன் 13ம் தேதி முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

TN Schools will reopen as per plan the day after tomorrow

ஜூன்-13ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்! - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதி!!

நாளை மறுநாள் ஜூன் 13ம் தேதி முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த கல்வி ஆண்டில் கொரோனா ஊரடங்கு கொஞ்ம் தளர்த்தப்பட்டதையடுத்து பள்ளிகள் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் ஆண்டு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கபட்டு கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது.

தற்போது கோடை விடுமுறைக்குப் பின்னர் நாளை மறுநாள் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், திடீரென அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படும் என வதந்தி பரவியது. இதனிடையே, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைக்கிணங்க, அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாகவும், இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர்” என்றும் அமைச்சர் அன்பில மகேஷ் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, கும்பகோனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோடை விடுமுறைக்குப் பின்னர் வரும் 13ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திட்டமிட்டமடி திறக்கப்படும் என்று தெரிவித்தார். பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் நடபைறபெருவதாகவும் தெரிவித்தார். தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், அவ்வாறு வசூல் வேட்டை நடத்தும் பள்ளிகள் குறத்து புகார் வந்தால், சம்பத்தபட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

LKG - UKG விவகாரம்.. திடீர் பல்டி அடித்த அமைச்சர்.. நெருக்கடி கொடுக்கும் ஆசிரியர் கூட்டணி..