தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படுமா ? அதிகரிக்கும் கொரோனா.. தேதி மாறுமா ?

Schools Reopen : தமிழகத்தில் விடுமுறைக்கு பிறகு ஜூன் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 

Tn schools will be reopened on June 13 is not confirmed spreading news of increased corona in Tamilnadu

ஓமிக்ரான் BA5 கொரோனா காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 22 இடங்களில் கொரோனா அதிகமாக உள்ளது. இந்த சூழலில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'கோடை விடுமுறை முடிந்து எதிர்வரும் 13ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திட்டமிட்டபடி திறக்கப்படும். பள்ளிக்கூடங்களில் மாணவ ,மாணவியர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சரியாக உள்ளதா ? என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி வாகனங்கள் நடைமுறைகள் குறித்து ஏற்கனவே சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. பள்ளி வாகனங்கள் முறையாக ஆய்வு செய்யப்படும். 

பள்ளிக்கூடம்  இயங்கும் நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும் என  மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திருவிடைமருதூர் ராமலிங்கம் வேண்டுகோள் விடுத்த நிலையில், பள்ளிக்கூடம் இயங்கும் நேர மாற்றம் குறித்து தமிழக முதல்வருடன் கலந்து பேசி அதில் உள்ள நன்மை தீமைகள் குறித்து விவாதிக்கப் பட்ட பின்பு அது குறித்து முடிவெடுக்கப்படும்' என்று கூறினார். மேலும், பள்ளிகள் திறப்பு தேதி மாறுமா ? என்ற கேள்வி  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் எழுப்பப்பட்டது. 

இதற்கு பதில் அளித்த அவர், 'கொரோனா பரவல் சற்று அதிகரித்தாலும் பாதிப்பு 100 முதல் 200 பேர் பாதிப்பு என்ற அளவில் தான் உள்ளது. அதனால் பள்ளிகள் அறிவிக்கப்பட்டபடி திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும், 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கோர்பவேக்ஸ் இரண்டாவது டோஸ் செலுத்தப்படும். இந்த நெருக்கடியான சூழலில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க : Ration Shop : குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ! இனி கவலையில்லை மக்களே !!

இதையும் படிங்க : Seeman : திமுக ஊழல் ஓகே.. அதிமுக ஊழலை எப்போ பேசுவீங்க அண்ணாமலை ? சீமான் அதிரடி பேட்டி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios