சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தொல்காப்பியப் பூங்கா, பல்வேறு புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இரு பகுதிகளை இணைக்கும் புதிய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளதுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை நேரில் பார்வையிட்டார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள தொல்காப்பியப் பூங்கா, பல்வேறு புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு மக்களுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில், தொல்காப்பியப் பூங்காவின் பகுதி 1 மற்றும் பகுதி 2 இணைக்கப்பட்டுள்ளன. இரு பகுதிகளையும் இணைக்கும் வகையில் சாந்தோம் சாலையில் ஒரு உயர்மட்ட நடைமேம்பாலம் (Skywalk) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் சாலையை கடக்காமல் பாதுகாப்பாக, சுலபமாக பூங்காவின் இரு பகுதிகளிலும் சென்று வர முடியும்.

புதிய வசதிகளுடன் தொல்காப்பியப் பூங்கா மேம்படுத்தப்பட்டதால், குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவருக்கும் ஓய்வெடுக்கும் இடமாகவும், சுற்றுலா தலமாகவும் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடற்பயிற்சி பாதைகள், பசுமை பகுதிகள், அமர்விடங்கள், விளையாட்டு வசதிகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

முதல்வர் பார்வையிட்டபோது பல அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த புதிய மேம்பாடுகள், சென்னை நகரின் அடிப்படை வசதிகள் மற்றும் பசுமை வளர்ச்சியை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. 

அப்போது முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் கே.என் நேரு ஆகியோரும் அடங்குவார்கள். அதில் அமைச்சர் கே.என் நேரு கலர் டிசர்ட் உடன் வந்துள்ளார். அமைச்சர் கே.என் நேரு வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை வேட்டியுடன் பார்த்து வந்த நமக்கு இது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.