மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்னுவின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான நல்லகண்ணு இன்று தனது 99-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். நேர்மை, எளிமை, ஆகிய பண்புகளுடன் அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக திகழும் நல்லக்கண்ணு கட்சி பேதமின்றி அனைத்து அரசியல் தலைவர்களின் அன்புக்குரியவராக திகழ்கிறார்.

திருநெல்வேலி அருகே, ஸ்ரீவைகுண்டம் அருகே வசதியான குடும்பத்தில் பிறந்த நல்லக்கண்ணு சிறு வயது முதலே சேவைப்பணிகளில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். மேலும் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு நாட்டின் சுதந்திரத்திற்காக சிறை சென்றவர்.. 15 வயது முதலே இடதுசாரி இயக்க செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டிருந்த நல்லகண்ணு 18-வது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link:https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஸ்ரீ வைகுண்டம், நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பட்டியலின மக்களின் வாழ்வை மேம்படுத்த எண்ணற்ற போராட்டங்களை முன்னெடுத்தவர் நல்லகண்ணு. சிறுவயதில் ரஞ்சிதம் அம்மாளை திருமணம் செய்த நல்லகண்ணுவுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். தமிழக அரசின் அம்பேத்கர் விருது, தகைசால் விருது ஆகியவற்றை நல்லகண்ணு பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நல்லக்கண்ணுவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

இதுகுறித்து தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “விடுதலைப் போராட்டத் தியாகியும் - முதுபெரும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவருமான ‘தகைசால் தமிழர்’ அய்யா நல்லகண்ணு அவர்களின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களை நேரில் இன்று வாழ்த்தினோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாம் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரணங்கள் - முதற்கட்ட இழப்பீடுகளை வழங்கி வந்துள்ள நிலையில், அங்குள்ள கள நிலவரங்களை அய்யா அவர்கள் அக்கறையுடன் கேட்டறிந்தார்கள். அங்கு, இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க கழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விளக்கிக் கூறினோம்.

விடுதலைப் போராட்டத் தியாகியும் - முதுபெரும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவருமான ‘தகைசால் தமிழர்’ அய்யா நல்லகண்ணு அவர்களின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களை நேரில் இன்று வாழ்த்தினோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாம் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரணங்கள் - முதற்கட்ட… pic.twitter.com/lLIUmMRO71

— Udhay (@Udhaystalin) December 26, 2023

<!--%3Cscript%20async%20src%3D%22https%3A%2F%2Fplatform.twitter.com%2Fwidgets.js%22%20charset%3D%22utf-8%22%3E%3C%2Fscript%3E-->

போராட்டக் குணம், எளிமை, ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதி என இளையத் தலைமுறைக்கு வழிகாட்டும் பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான அய்யா நல்லகண்ணு அவர்கள் நூற்றாண்டையும் கடந்து மேலும் பல்லாண்டுகள் நமக்கெல்லாம் வழிகாட்டட்டும். அய்யா அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி வெள்ளம்.. மக்களை நேரில் சந்திக்கும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் - மாவட்ட நிர்வாகத்துடன் ஆய்வு கூட்