Asianet News TamilAsianet News Tamil

சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்க வேண்டும்: ஈபிஎஸ் அட்வைஸ்

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகளை நேரில் அனுப்பி, இழப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

TN Govt should give Rs 20,000 per acre relief for sorghum farmers: Edappad Palaniswami sgb
Author
First Published Nov 2, 2023, 6:29 PM IST | Last Updated Nov 2, 2023, 6:44 PM IST

சோளம் பயிரிட்டு நஷ்டம் அடைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகளை நேரில் அனுப்பி, இழப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி, சோளம் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவாக நிவாரணம் வழங்கவும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? தென் மாவட்டங்களுக்குச் செல்ல புதிய சிறப்பு ரயில் அறிவிப்பு!

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

கடலூர் மாவட்டம், விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய தாலூகாக்களில் சுமார் 60 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சோளம் முழுமையாகக் கருகி விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்குள்ளாகி உள்ளனர்.

பயிர் காப்பீடு செய்யப்படாத நிலையில், கடன் வாங்கி சோளம் பயிரிட்ட விவசாயிகள், வாங்கிய கடனை திருப்பிக் கட்ட முடியாத நிலையில், தாங்கள் பாடுபட்டு உழைத்த உழைப்பும் வீணாகிவிட்டதே என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

விடியா திமுக அரசின் வேளாண் துறை மந்திரி, உடனடியாக வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை நேரில் அனுப்பி, பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுப்பு நடத்தி, சோளம் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்துகிறேன். 

சோளம் பயிரிட்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 20,000/- ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று விடியா திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

சாம்சங் மொபைல் வாங்கப் போறீங்களா? இந்த தீபாவளி ஆஃபரைப் பாத்துட்டு செலக்ட் பண்ணுங்க!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios