உளவுத்துறை ஐ.ஜி. பணியிடமாற்றம்... புதிய உளவுத்துறை ஐ.ஜி.யாக செந்தில்வேலன் நியமனம்!!
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உளவுத்துறை ஐ.ஜி. ஆசியம்மாள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அமலாக்கத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய உளவுத்துறை ஐ.ஜி.யாக செந்தில்வேலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !
இதேபோல் மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக தேஷ்முக் சேகர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி.!
சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக ஆல்பர்ட் ஜான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் காவல் கண்காணிப்பாளராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரிகள் சமய் சிங் மீனா, கிரண் ஸ்ருதி, தீபக் சிவச், ஹர்ஷ் சிங், சாய் பிரனீத் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.