குடும்பத்தில் ஒரே ஒரு நபர் இருந்தாலும் ரூ.6000 நிவாரண தொகை உண்டு: தமிழக அரசு விளக்கம்!

குடும்ப அட்டையில் ஒரே ஒரு நபரின் பெயர் மட்டும் இருந்தாலும், அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அவருக்கும் நிவாரணத் தொகை ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

TN Govt flood relief aid to help one member family sgb

மிக்ஜம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செஙு்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ்களைப் பெற சிறப்பு முகாம்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஆலோசனைக்குப் பின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரண உதவி ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்றும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கொடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.

TN Govt flood relief aid to help one member family sgb

சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.8,000, 33 சதவீதத்திற்கும் மேல் சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000, மாடுகள் உயிரிழப்புக்கு ரூ.37,500, ஆடுகள் உயிரிழப்புக்கு ரூ.4,000, முழுதும் சேதமடைந்த மீன்பிடி வலைகள் மற்றும் கட்டுமரங்களுக்கு ரூ.50,000, பகுதி அளவுக்குச் சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை நிவாரணத் தொகை வழங்கப்படும்.

இந்த நிலையில், குடும்ப அட்டையில் ஒரே ஒரு நபரின் பெயர் மட்டும் இருந்தாலும், அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அவருக்கும் நிவாரணத் தொகை ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதனக் கடன் வழங்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். காப்பீட்டு தொகையை விரைந்து வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிப்பினால் சேதமடைந்த சான்றிதழ்களை பொதுமக்கள் கட்டணமின்றி எளிதாகப் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ்களைப் பெற சிறப்பு முகாம்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios