Asianet News TamilAsianet News Tamil

வெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ்களைப் பெற சிறப்பு முகாம்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் போன்றவற்றை மீண்டும் பெறுவதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்ப்பதற்காக இந்தச் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Govt announces special camps to get flood damaged certificate sgb
Author
First Published Dec 9, 2023, 8:20 PM IST

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிப்பினால் சேதமடைந்த சான்றிதழ்களை பொதுமக்கள் கட்டணமின்றி எளிதாகப் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் போன்றவற்றை மீண்டும் பெறுவதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்ப்பதற்காக இந்தச் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் பல்வேறு மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு நிதியை மட்டும் நிவாரணமாக அறிவித்த ஸ்டாலின்... தமிழக அரசின் பங்கு என்ன? அண்ணாமலை கேள்வி

Govt announces special camps to get flood damaged certificate sgb

மழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி, பொது மக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில், குறுவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் வருகிற 11-12-2023 (திங்கட்கிழமை) அன்றும், சென்னை மாவட்டத்தில், சென்னை மாநகராட்சியின் கோட்ட அலுவலகங்களில் வருகிற 12-12-2023 (செவ்வாய்க்கிழமை) அன்றும் தொடங்கப்படும்.

சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிக்கப்படும். மேற்படி சிறப்பு முகாம்களில், பொதுமக்களின் வசதிக்கென, இ-சேவை மையங்களும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

டாஸ்க்கை முடித்தால் காசு... டெலிகிராம் மூலம் 18 லட்சம் பணத்தைச் சுருட்டிய கும்பல்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios