Asianet News TamilAsianet News Tamil

கடல் பசு இனங்களை பாதுகாக்க பாதுகாப்பகம் அமைக்கப்படும்... அறிவித்தது தமிழக அரசு!!

இந்தியாவில் முதன்முறையாக பாக். விரிகுடாவில் கடல் பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

tn govt  announced sanctuary will be set up to protect sea cows
Author
First Published Sep 21, 2022, 6:03 PM IST

தமிழக கடற்பகுதிகளை உள்ளடக்கிய பாக். விரிகுடாவில் கடல் பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரிதான கடல்பசு இனம் தமிழகத்தில் அழிந்து வரக்கூடிய நிலையில் உள்ளது. இதை அடுத்து கடல் பசு இனத்தையும் அதன் வாழ்விடத்தையும் பாதுகாக்க மன்னார் வளைகுடா, பாக். விரிகுடா பகுதிகளில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: நெல்லையில் ரூ. 10.62 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள்... முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாநகராட்சி மேயர்!!

அதனை செயல்படுத்தும் விதமாக தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளை உள்ளடக்கிய பாக். விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக பார்க் நீரிணையில் 446 சதுர கிலோமீட்டர் பரப்பளவில்  கடல் பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. கடல் பசு இனங்களை பாதுகாப்பதனால் கடல் பகுதிகளுக்கு அடியில் உள்ள கடல் புற்கள் பாதுகாக்கப்படும் எனவும், வளிமண்டல கார்பனை அதிக அளவில் நிலைப்படுத்த கடற்பசு பாதுகாப்பகம் உதவும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்... அறிவித்தது போக்குவரத்துத்துறை!!

கடல்புல் படுகைகள் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏதுவாக மேம்படுத்தப்படும் என்றும், தற்போது 240 கடல் பசுக்கள் மட்டுமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான கடல் பசுக்கள் தமிழ்நாட்டின் கடற் பகுதிகளிலேயே காணப்படுவதாகவும், கடல் பசுக்களின் வாழ்விடங்களை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டிய உடனடி தேவை எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. உள்ளூர் மீனவர்களுடன் ஆலோசனை நடத்தி கடல்பசு பாதுகாப்பகம் அமைப்பது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios