Asianet News TamilAsianet News Tamil

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்... அறிவித்தது போக்குவரத்துத்துறை!!

ஆயுதப் பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

special buses from chennai for ayutha pooja holidays
Author
First Published Sep 21, 2022, 4:57 PM IST

தமிழகத்தில் பொங்கல், ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது அளிக்கப்படும் விடுமுறையில் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பது வழக்கம். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் ஆயுத பூஜை விடுமுறைகள் நெருங்கி வருவதை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆயுதப் பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த் பேசிய அவர், ஆயுதப் பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இதையும் படிங்க: நெல்லையில் ரூ. 10.62 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள்... முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாநகராட்சி மேயர்!!

பிற ஊர்களில் இருந்து மற்றப் பகுதிகளுக்கு 1,650 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக கோயம்பேடு உள்ளிட்ட 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக 2,050 பேருந்துகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் விவரங்கள்: 

தாம்பரம் மெப்ஸ்(MEPZ) பேருந்து நிறுத்தம்:

  • திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போளூர் சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
  • திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள்
  • திண்டிவனம் வழியாக புதுச்சேரி. கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து..! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

பூவிருந்தவல்லி டைஸ்:

  •  வேலூர், ஆரணி, ஆற்காடு. திருப்பத்தூர். காஞ்சிபுரம். செய்யாறு. ஒசூர் திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்

கோயம்பேடு பேருந்து நிலையம்:

  • (புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி ECR), மயிலாடுதுறை கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், கோங்கண்ணி, அரியலூர், ஜெங்கொண்டம். திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், தன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், பெங்களூம், திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர் என இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்.
Follow Us:
Download App:
  • android
  • ios