தமிழகம் முழுவதும் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட்டும். நாளை ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் உஷார் படுத்துப்பட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக தமிழகத்தில்  8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமறை அறிவிக்க்ப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , தொடர் மழை காரணமாக சென்னையில் இரவு முழுவதும் கண்காணிப்பு பணி நடைபெறும். கடலோர மாவட்டங்களில் சராசரி அளவை விட அதிகமாக மழை பெய்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் தாழ்வான 2 இடங்களில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் தாழ்வான 4 இடங்களில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் அவற்றை வெளியேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மழையால் பாதிக்கப்படும் 4,399 இடங்களில் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

மக்கள் அச்சப்படுகிற நிலை தற்போது இல்லை. 37 வருவாய் மாவட்டங்களிலும் நிலைமை கட்டுக்குள் உள்ளது. நீர்நிலைகளில் செல்பி மற்றும் புகைப்படம் எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். 

ஆற்றங்கரையோரம் இருக்க கூடியவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை இன்னும் தேவையான மழை பெய்யவில்லை என தெரிவித்தார்..

மீட்பு பணிகளை மேற்கொள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது என தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், 21 கமாண்டோ தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மழை வெள்ள மீட்பு பணிகளுக்கு, 101 என்ற எண்ணில் தீயணைப்புத்துறையை தொடர்பு கொள்ளலாம். சென்னையில் உள்ளவர்கள், 044-28554309, 28554311, 28554313, 28554314, 28554376 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் அறிவித்தார்..vvvv