தமிழக ஆளுநர் பன்வாரிலால்புரோகித்தை,முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

நேற்று ஆளுநர்,டெல்லி சென்று பிரதமர் மோடியை சுமார் 15 நிமிடம்சந்தித்து  பேரினார்.பின்னர் உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கையும் சந்தித்து விட்டு நேற்று  இரவே அவசரமாக தமிழகம் திரும்பினார் ஆளுநர் 

இந்நிலையில் இன்று மாலை ராஜ் பவனில், ஆளுநரை முதல்வர் சந்திக்க உள்ளதால்,இது ஒரு  முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால்,டெல்லி செல்லும் முன்,நேற்று முன்தினம் தலைமை செயலாளர் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்த பின்பு நேற்று   அவசரமாக டெல்லி சென்றது  குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில்,தொடர்ந்து போராட்டம் வலுத்து வரும் நிலையில்,அடுத்தக்கட்ட  நடவடிக்கை என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மேலும்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும்,தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூட வேண்டும் எனவும் தொடர்ந்து போராட்ட  முழக்கம் எழுந்து வரும் நிலையிலும்,ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சி,பல   தனிக்கட்சிகள், பொதுமக்கள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக,குரல் எழுப்பி   வருகின்றனர்

போராட்டம்  தீவிரமடையும் நிலையில், இன்று மாலை 6  மணி அளவில் ஆளுநரை சந்திக்க உள்ளார் எடப்பாடி என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சந்திப்பில் காவேரி  மேலாண்மை வாரியம் குறித்த முக்கிய தகவல் வெளியாக வாய்ப்பு இருக்கிறது என  கூறப்படுகிறது.