மதுரை காமராஜர் பல்கலை., விழாவில் பேசாத ஆளுநர்: மாணவர்களுடன் தனித்து கலந்துரையாடல்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி அந்த நிகழ்ச்சியில் பேசவில்லை

TN Governor did not speak in mk university function and had Separate discussion with students

மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தின் 55ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். சுதந்திரப் போராட்டத் தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவிற்கு கவுர டாக்டர் பட்டம் வழங்க மறுத்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார்.

காலை 10.40 மணிக்கு தொடங்கிய விழா மதியம் 1 மணிக்கு முடிந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமார் வரவேற்று பேசினார். இதையடுத்து, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் துணைவேந்தர் காமாட்சி முதலி விழாவில் பேசினார்.

கேவலமான கேள்விகளை கேட்கிறார்கள்: கோபமாக வெளிநடப்பு செய்த மஹுவா மொய்த்ரா!

இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ரவி பட்டங்களை வழங்கினார். மொத்தம் 1,34,570 பேருக்கும் பட்டம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, விழாவில் ஆளுநர் ரவி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ரவி பேசவில்லை. இருப்பினும், ஆளுநர் ரவியுடன் மாணவ, மாணவிகள் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது.

 

 

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள அப்துல் கலாம் அரங்கில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.  இதுகுறித்து ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில், “ஆளுநர் ரவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பதக்கம் வென்ற மாணவ, மாணவியருடன் விரிவாக  கலந்துரையாடினார். மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தேசிய சொத்து என்பதை அவர்களுக்கு நினைவூட்டிய ஆளுநர், வாழ்க்கையில் பெரிய இலக்குகளை நிர்ணயித்து தேசத்தை கட்டியெழுப்புமாறு  வலியுறுத்தினார்.” என பதிவிட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios