புகையிலை பொருட்கள் மீதான தடை நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தடை செய்து உத்தரவிட்டுந்தார். இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் புகையிலைப் பொருட்களின் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டன. அதனையும் மீறி விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
கடந்த அதிமுக ஆட்சியின் போது அப்போதைய எதிர்க்கட்சியான திமுக, கடைகளில் மிகவும் எளிதாக புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாகக் கூறி சட்டமறத்திற்கு புகையிலைப் பொருட்களை கொண்டு வந்தனர். இந்த நடவடிக்கைக்காக திமுகவினர் மீது வழக்கே பதிவு செய்யப்பட்டது. அந்த அளவிற்கு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன.
இந்நிலையில், குட்கா, பான் மசாலா நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்ற மாநிலங்களில் விற்கப்படுவதை காரணம் காட்டி தமிழகத்தில் தடையை விலக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை மீதான தடையை நீக்குவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர்கல்வியில் மாணவிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 27% உயர்வு - முதல்வர் பெருமிதம்
இந்நிலையில், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி; 24, 25ல் பரப்புரை செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்