ஈரோடு கிழக்கு தொகுதி; 24, 25ல் பரப்புரை செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணிக்கட்சி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகின்ற 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பாக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக தென்னரசு என்பவர் போட்டியிடுகிறார். மேலும் அமமுக, பாமக, அதிமுகவின் மற்றொரு அணியான ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டவர்களின் மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் சார்பாக அந்தந்த நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து வருகின்ற 24, 25 ஆகிய தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி வருகின்ற 24ம் தேதி நச்சாயி டீக்கடை, பெரிய வலசு, அக்ரஹாரம் வண்டிப்பேட்டை, கே.என்.கே. சாலை உள்ளிட்ட பகுதிகளிலும், 25ம் தேதி ஜெகதநாதபுரம் காலனி, சூரப்பட்டு நால்ரோடு, மரப்பாலம், சின்ன மாரியம்மன் கோவில் மைதானம்சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் முதல்வர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
திருப்பூரில் 8 மாதங்களுக்கு சேர்த்து கணக்கிடப்படும் மின் அளவு; குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி
அதே போன்று வருகின்ற 19ம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
ஒரே குடும்பத்தில் 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி; 2 குழந்தைகள் பலி, 3 பேர் கவலைக்கிடம்