திருப்பூரில் 8 மாதங்களுக்கு சேர்த்து கணக்கிடப்படும் மின் அளவு; குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி
திருப்பூர் மாவட்டம் குண்டடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 8 மாதங்களாக மின் பயன்பாட்டு அளவு கணக்கிடப்படாத நிலையில் தற்போது விடுபட்ட அனைத்து மாதங்களுக்கும் சேர்த்து ஒரே முறையில் கணக்கீடாக அளவிடப்பட்டு மின் கட்டணம் செலுத்த சொல்வதால் குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்சார அளவு கணக்கிடப்படப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை மாதம் தோறும் மின்சாரம் கணக்கிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் குண்டடம் வடக்கு மின்சார அலுவலகத்திற்கு உட்பட்ட குண்டடம் டவுன் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 8 மாத காலமாக மின்சாரம் கணக்கிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் கடந்த 8 மாதங்களுக்கும் சேர்த்து தற்போது மின்சாரம் கணக்கிடப்பட்டு பணம் செலுத்துமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தை பொருத்தளவில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. அடுத்த 100 - 200 யூனிட் மின்சாரத்திற்கு குறிப்பிட்ட தொகையும், 200 - 300 யூனிட் மின்சாரத்திற்கு கூடுதல் தொகையும், 300 - 500 யூனிட் மின்சாரத்திற்கு இன்னும் அதிகமான தொகையும் வசூலிக்கப்படுகிறது.
குமரியில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையின் கழுகு பார்வை காட்சி
இந்த நிலையில், அப்பகுதியில் 8 மாதங்களுக்கு சேர்த்து மின்சாரம் கணக்கிடப்படுவதால் மின் பயன்பாட்டு அளவு பலமடங்கு உயர்ந்துள்ளது. அதற்கு தகுந்தவாறு பயன்பாட்டு கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளதால் குடியிருப்பு வாசிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் ரூ.500 முதல் ரூ.700 வரை மின் கட்டணம் செலுத்தும் எங்கள் வீட்டிற்கு தற்போது ரூ.32 ஆயிரம் மின்சார கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளதாக குடியிருப்புவாசி ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார்.
ஒரே குடும்பத்தில் 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி; 2 குழந்தைகள் பலி, 3 பேர் கவலைக்கிடம்