TN government answers HC about vandhe matharam

வந்தே மாதரம் பாடல் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது.

இதில் முதல் தாளை 2.41 லட்சம் பேரும் இரண்டாம் தாளை 5.12 லட்சம் பேரும் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் ஜூலை 1 ஆம் தேதி வெளியானது.

இதில் 95 % பேர் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல்களே வெளியானது.

இந்நிலையில், இந்த ஆசிரியர் தேர்வில் வந்தே மாதரம் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்வி இடம் பெற்றிருந்தது. அதற்கு வங்க மொழி என பதிலளித்திருந்த ஒருவர் தனக்கு மதிப்பெண் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வந்தே மாதரம்" பாடல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதா அல்லது வங்க மொழியில் எழுதப்பட்டதா ? என கேள்வி எழுப்பியது.

அதற்கு இரண்டு மொழியிலும் எழுதப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில்முதலில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு பின்னர், வங்க மொழியில் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

வந்தேமாதரம் எந்த மொழியில் எழுதப்பட்டது என தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், வந்தே மாதரம் பாடல் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது