Asianet News TamilAsianet News Tamil

ஜன.17 அரசு விடுமுறை... காரணம் இதுதான்... அறிவித்தது தமிழக அரசு!!

ஜனவரி 17 ஆம் தேதி அரசு விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அதற்கான பணி நாளாக 29.01.2022 அன்று பணிநாளாக அறிவித்தும் ஆணை வெளிடப்பட்டுள்ளது.

tn government announced Jan 17 as Government Holiday
Author
Tamilnadu, First Published Jan 11, 2022, 6:37 PM IST

ஜனவரி 17 ஆம் தேதி அரசு விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அதற்கான பணி நாளாக 29.01.2022 அன்று பணிநாளாக அறிவித்தும் ஆணை வெளிடப்பட்டுள்ளது. இதுக்குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகை நெருங்குவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 7ஆம் தேதி முதல், இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில் உள்ள நிலையில், 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாகவும்.

tn government announced Jan 17 as Government Holiday

16 ஆம் தேதி அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும், 18 ஆம் தேதி தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட நாளான 17 ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள் சங்கங்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. அக்கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து, பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 16.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும், 18.01.2022 தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும்,

tn government announced Jan 17 as Government Holiday

இடைப்பட்ட நாளான 17.01.2022 (திங்கட்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் உள்ளுர் விடுமுறை அளித்தும் அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அதற்கான பணி நாளாக 29.01.2022 அன்று பணிநாளாக அறிவித்தும் ஆணை வெளிடப்படுகிறது. மேற்கண்ட உள்ளூர் விடுமுறை நாளானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act. 1881)-ன் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை மேற்கொள்ளும் பொருட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படுவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கொள்ளப்படுகிறார்கள் என அறிக்கயைில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios