கோவையில் ஜவுளிக்கடையில் பணிபுரியும் மகேஷ், தன்னுடன் பணிபுரியும் 20 வயது மாற்றுத்திறனாளிப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று, குடிக்கத் தண்ணீர் கேட்பது போல் நடித்து அவரை பலாத்காரம் செய்தார்.

ஈரோடு மாவட்டம், தாளவாடியைச் சேர்ந்தவர் மகேஷ் (32). இவர் கோவையில் தங்கி இருந்து காந்திபுரத்தில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை செய்து வருகிறார். அதே ஜவுளிக்கடையில் கோவையைச் சேர்ந்த 20 வயதான மாற்றுத் திறனாளிப் பெண்ணும் அவருடைய தாயாரும் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த இளம் பெண்ணுக்கு நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் அவர் தாயாருக்கு மதிய உணவு கொண்டு வந்து கொடுத்து விட்டு வீட்டிற்குச் சென்றார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்பொழுது மகேஷ் அந்த இளம்பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அவரிடம் பக்கத்தில் ஒரு வேலை விஷயமாக வந்ததாகவும், கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடு என்று கேட்டுள்ளார். உடனே அந்த இளம்பெண் தண்ணீர் எடுக்கச் சென்ற போது மகேஷ் வீட்டுக்குள் சென்று இளம் பெண்ணை கட்டிப் பிடித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஏன்? இப்படி செய்கிறீர்கள் என்று கூறியபடி அவரிடம் தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை, பின்னர் அவரை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று மகேஷ் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக கூறி விட்டு அங்கு இருந்து தப்பி சென்றார்.

இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் நடந்த சம்பவத்தை கூறி அவரது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காட்டூரில் உள்ள கோவை மாநகர மத்திய மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவாக இருந்து வந்த மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.