முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் இருப்பதாக பாஜக எழுப்பிய குற்றச்சாட்டுக்கு Tn Fact Check விளக்கம் அளித்துள்ளது. 

 வாக்காளர் பட்டியலில் பீகாரில் பல லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதையடுத்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது பல மாநிலங்களில் முறைகேடாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இதையடுத்து தேர்தல் ஆணையத்தை முற்றுவிடும் போராட்டத்தையும் இந்திய கூட்டணி கட்சியின மேற்கொண்டு இருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க திட்டமிட்ட பாஜக, முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 பேர் வாக்காளர் உள்ளார்களே இதற்கு பதில் சொல்லுங்கள்? என்ன தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது

கொளத்தூர் தொகுதி வாக்காளர் பட்டியல்

இது தொடர்பாக தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு வெளியிட்டுள்ள பதிவில், முதல்வர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் பாஜக எம்பி தெரிவித்துள்ளார். அது தனி வீடல்ல, அடுக்குமாடி குடியிருப்பு பகுதி ! என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொளத்தூர் தொகுதியில் 84ம் வாக்குச்சாவடியில் வீட்டு எண் 11ல் 30 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ரஃபியுல்லா என்று ஒரே பெயரில் 3 வாக்காளர்கள் உள்ளனர்' என்று பாஜக எம்.பி பேசியதை தமிழக பாஜக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

கொளத்தூர் தொகுதி ஆண்டாள் அவென்யூவில் உள்ள 11ம் எண் என்பது தனி வீடல்ல, அது அடுக்குமாடி குடியிருப்பு பகுதி. வாக்குச்சாவடி எண் 84 விவரங்களின்படி, வரிசை எண் 40 முதல் 75 வரையில் உள்ள வாக்காளர்கள் 11 எண் கொண்ட ஏ.எஸ். வீனஸ் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இதில், ரஃபி என்பவரின் பெயர் வரிசை எண் 50லும், 52ல் கணவர் என்கிற இடத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும், வரிசை எண் 348, 352 ஆகியவற்றில் தந்தை என்கிற இடத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், காணொளியில் குறிப்பிட்டதுபோல் ரஃபி என்ற பெயரில் 3 வாக்காளர்கள் இல்லை. மேலும், வாக்குச்சாவடி எண் 157ல் (வேறு பகுதி) ரஃபியுல்லா பெயர் தந்தை, கணவர் என்ற இடங்களில் வருகிறது.

இஸ்லாமியர் மட்டும் வசிக்கவில்லை

11 எண் கொண்ட குடியிருப்பில் இஸ்லாமியர்கள் மட்டுமே வசிப்பது போன்ற தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். அங்கு அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். எனவே வதந்தியைப் பரப்பாதீர் ! என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு கேட்டுக் கொண்டுள்ளது.